மழைபோல் பெய்யும் வெயில்,
எழுத எழுத எழுதிவிடு
வரியைப் போலல்ல வாழ்வு.
மலரென விரியும் இருள்,
பிழையாயினும்
வக்கற்று எரிகிறது
இளம் மூங்கில்..
மெல்லப் பரவும் காற்றின் திசையில்
ஒற்றைச் சிறகின் நிழல்,
புனைவிரவின் ஈர நெடி.
ஒரு அரேபியா
ஒரு பாலை
ஒரு கானல்
ஒரு நிஜம்.
யாசிப்பு யோசனைக்கு மறுதலித்தும்,
ஒலி என்பதைக் காட்டிலும்
இசையெனச் சொல்லிவிடுவது
ஆகச்சிறந்தது.
நன்றி உயிரோசை..
12 comments:
அருமை நண்ப , உயிரோசையில் வந்தமைக்கு வாழ்த்துகள்.
//மழைபோல் பெய்யும் வெயில்//
முதல் ஆரம்பித்த இந்த வெயில் இறுதி வரி வரையில்
தகிக்கிறது
nice
unarvukalin
உண்மை nilaiyil kasintha வார்த்தைகள் அருமை . பகிர்வுக்கு நன்றி
ஆரம்பமே அசத்தலான வரிகள் !
ரொம்ப நல்லா இருக்கு நண்பா
//மலரென விரியும் இருள்,
பிழையாயினும்
வக்கற்று எரிகிறது
இளம் மூங்கில்
ஒற்றைச் சிறகின் நிழல்,
புனைவிரவின் ஈர நெடி//
அருமை வாழ்த்துகள்
நல்ல வார்த்தைகள், அருமை.
//ஒலி என்பதைக் காட்டிலும்
இசையெனச் சொல்லிவிடுவது
ஆகச்சிறந்தது//
Nice one.
உயிரோசையில் படித்தேன், அருமையான கவிதை. இருளின் சப்தத்தை கேட்க்க வைத்தது.
கவிதை அருமை
என்ன தலைவரே நல்லபடியாக ஊர் போய் சேர்ந்தீர்களா.
விரைவில் அழைக்கிறேன்.
ஊருக்கு போயும் அரேபிய ராசாக்கள் தொடர்வதை பார்த்தல் திரும்பவும் இந்த பொட்டல் பாலைக்குதான் வருவீங்க போல.
ரொம்ப நல்லா இருக்கு நண்பா...தொடருங்கள்..
//மலரென விரியும் இருள்//
நல்லா இருக்கு.
Post a Comment