நெருங்கி வருகிற விழிகளிலிருந்து
சர்ப்பங்கள் வெளியிறங்குவது
அறிந்தே
நகர்தல் மறுதலிக்கிறோம்
விஷம் பூத்த
செந்நிற மௌனம் நிரம்ப
துயர் இசைப் பாடல்
ரட்சித்தலையும் புனிதத்தையும் தவிர்த்து
துரோகத்தையும்
குரூரத்தையும்
குறிப்புகள் சேகரித்து சேகரித்து
மரப்பெட்டியில் அடைக்கலாம் அவர்கள்
யாவருக்குமான ஆமென்களோடு
கரைந்து தீரட்டும்
தைரியம்கூடிய பரிசுத்தம் நிறைந்த
ஸ்வாதீனத்தில் அல்லாத
நமது வக்கற்ற நேசமும்
நாமும்
நன்றி யாவரும்.காம்
2 comments:
என்னதொரு உண்மை வரிகள்...!
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/09/blog-post_29.html) சென்று பார்க்கவும்...
நன்றி…
Post a Comment