Wednesday, July 18, 2012

டேய் தம்பி கையைத் தூக்கி உன் பெயரைச் சொல்லு



அங்கே எங்கேயோ சப்தம் கேட்டது 
நிறையப் பெயர்கள் இணைந்து கூட்டுப்பிரார்த்தனையில்
பெயரில் என்ன இருக்கிறது,
எல்லாமும் என்றார் ஆறுமுகச்செட்டியார்
முனியாண்டித்தேவர் ஆமோதித்தார்
சாந்தி இருவரிடமும் சரிசமமாகப் பணம் வாங்கினாள்
ராமமூர்த்தி சித்தப்பா சாக்கடையோரம் நட்டநடுப்பகலில் நள்ளிரவைத் தாண்டியிருந்தார்
முருகன் அண்ணன் தன் பெயரை தன் நினைவில் அல்லாது வளையல் பொறுக்கிக்கொண்டிருந்தான்
இந்திராணியம்மா கோவிலுக்குப் போகிறாள்
கோகிலா அக்கா தூக்கு மாட்டுகிறாள்
அஞ்சலிப் பாப்பா தேம்பித் தேம்பி அழ ஆரம்பிக்குது
பால் வாங்கப்போன முருகேசநாடார் நாலு நாளாச்சு; இன்னம் காணல

நன்றி உயிரோசை

 

No comments: