Tuesday, November 22, 2011

இயலாமை






அன்பு ததும்ப அழைப்பதாய் அழைக்கிறாய்
வரவேற்பறையில் அமர்ந்து விவாதிப்போமென்கிறாய்
ஒரே ஒரு நாற்காலியே அங்கு போடப்பட்டிருக்கிறது
அமர்ந்து கொள்கிறாய்
குவளை நிறைய அவமானத்தை தருகிறாய்
தேநீரெனப் பருகச் சொல்லுகிறாய்
நீ மட்டுமே பேசிக்கொண்டிருகிறாய்
'ம்' சொல் என்கிறாய்
நல்லது என்கிறேன்
குரூரமாய் புன்னகைக்கிறாய்
நடந்தவைகளை மறந்து விடுமாறு கட்டளையிடுகிறாய்
நடந்து கொண்டிருப்பவைகளின் குற்றவுணர்ச்சி ஏதுமின்றி
பின் வெளியேறுமாறு உக்கிரமாய் கண்ணசைக்கிறாய்
இறைந்து கிடக்கும் அவமானத்தின் நிழலை இறுக வாரி
கழுத்து திருகி கொன்று விடலாமென குனிகிறேன்
உனது முதலாளித்துவம்
எனது முதுகில் ஓங்கி ஒரு போடு போடுகிறது.


நன்றி உயிரோசை..


2 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

முதலாளித்துவத்தின் அடுத்த முகத்தை அம்பலப்படுத்தியுள்ளீர்..

உயிரோடை said...

எல்லா இடத்திலும் நீலாம்பரி இருக்காங்க போல. நல்லா எழுதி இருக்கீங்க