இந்நாட்களில்
எவருக்கும் பெய்யாத மழையை
தன் பிளாஸ்டிக் செடிகளுக்குப்
பெய் பெய்யென
அறையிலிருந்த மழை சித்திரத்தை
தட்டித் தட்டிக் கொண்டிருந்தாள் அனகா!
அலுவல் முடித்த களைப்பில்
வீடு சேர்ந்த அம்மாவின்
கைகளில் அகப்பட்ட மழை
அனகாவின் கண்களிலிருந்து
சுரந்து தரப்பட்டது!
நன்றி உயிரோசை..
3 comments:
ஐயோ பாவம் அனகாக்குட்டி. கவிதை ரொம்ப நல்லாயிருக்கு.
கவிதை நல்லாயிருக்கு அருமை
கவிதை ரொம்ப நல்லா இருக்கு
Post a Comment