Tuesday, April 5, 2011

அதிர்வு



எறும்பு மொய்க்கும்
காலி தேநீர் டம்ளரில்
சுவை மிச்சமிருக்கிறது.

மேகத்தின் கால்களில்
ஈரம்
மழை குறிப்பெழுதுகிறது.

ஒரு கூட்ட நெரிசலில்
ஏதோவொரு அவன்
ஏதோ ஒரு அவளைத்
தேடுகிறான் அல்லது
தொலைத்துவிடுகிறான்.

தனித்துக் கிடக்கும் பாறையில்
நத்தையொன்று மெல்ல
இடம் பெயர்கிறது.

பக்கத்து காற்று
தூரத்திலேதோவொரு கிளையை
உடைத்து வந்திருக்கிறது.

சிறுவர்கள் இரண்டுபேர்
மணல்வீடு கட்டித்தீரும் தருவாயில்
தங்கைப் பாப்பாக்களை
அழைத்துக் கொண்டாடுகின்றனர்.

கடலில் அலை
இன்னும் மிச்சமிருந்தது.





நன்றி உயிரோசை..

1 comment:

உயிரோடை said...

யப்பா கிளாஸா இருக்கு ஆறுமுகம் முருகேசன்.

எல்லா இடத்திலும் எப்போதும் ஏதாவது மிச்சமிருக்கிருக்கிறது.