Monday, November 22, 2010

வேறொன்றுமில்லை.






வியர்வைப் பிசுபிசுப்பில் கருகித் தகிக்கும்
உலோக அடைப்பான் பயணத்தில் 
நான் அடைந்த நகரம்
எனக்கு மிகப்புதிதாக இருந்தது..

நகர்தலின் அதிர்வு தாளாது
பித்துப்பிடிக்கிறது மனமும் உடலும் ஒருசேர
முதுகுமுன் மார்புகளை சிலாகிக்கும்
அப்பருவப்பெண்ணிடம்..

வலுவற்ற
ஒரு புன்னகையைத் தருவிக்கிறேன்
வழியற்றுத்
தலையில் செருகிக்கொள்கிறாள்..

கவனித்தலில்
சிக்னல் யாசகப் பிள்ளைகளுக்கென
ஒரு தீர்வும் எடுக்க இயலுவதில்லை..

பருவம் எய்க்காத
பெண்ணுக்கு
அடுத்த பேருந்தில்
அமையப்பெறலாம் பிரசவ வலி..

அவசியமில்லை,
காரணங்களைக் கண்டறியுமுன்
நிறுத்தம் வந்துவிடலாம்.

எனது நிறுத்தத்தில்..

ஒரு தேநீர் டம்ளரிலோ
ஒரு சிகரெட் புகையிலோ
ஒரு டாஸ்மாக் முட்டையிலோ
பழகிக் கொள்கிறேன் இந்நகரத்தை.


நன்றி உயிரோசை.

4 comments:

VELU.G said...

சரளமான நடையுடன் அருமையான கவிதை

rvelkannan said...

ஆம் நண்பா, 'பழகி' கொள்ளத்தான் வேண்டியிருக்கு இந்த நரகத்தை

உயிரோடை said...

வேறொன்றுமில்லை என்று சொல்லுவதற்கு நகரத்தில் நிறைய இருக்கிறது போலும்

tamilcinemablog said...

அருமையான கவிதை
இவன்
http://tamilcinemablog.com/