Friday, August 20, 2010
நேசப்பரிபாஷை..!
கடல்மேல் பறவையாகும் வானம்!
போன்றதொரு நேசப்பரிபாஷையினை
விழிகளிரண்டிலும் அழுந்தப் பிடித்தவளாய்..
என்னை மிக நெருக்கத்தில்
பருகச் சொல்லிக் கெஞ்சுகிறாள் !
அப்பொழுதும் என்னை நான்
மிகப்பத்திரமாக மௌனமாகவே
தொலைத்துக் கொண்டிருந்தேன்..!
காய்ந்த அந்த ஒற்றைரோஜா இதழ்கள்
மழையின் ஈசல் போல்
அவளது மென்விரல்களில்
தன்னைச் செத்துக்கொண்டிருந்தது..
அப்பொழுதும் மௌனமாகவே வைத்திருந்தேன்
என்னை நான்..!
பிரிவின்..
கையடங்காக் குருதியினை...
ஒரு முத்தத்தில்..
எரித்துவிடத் தயாரானவாளாகி,
எனது வன்விரல்களை
மெல்லப் பற்றிக் கொண்டு
அழ.. அழ.. அழுதேவிடுகிறாள்...
நான் பெருமழையாகி
அவளை இறுகக் கட்டிக்கொள்கிறேன்..
பின் ஒருவானவில்லின் மேல்
இருவரும் கைகோர்த்து நடக்கின்றோம் !!
வண்ணத்துப்பூச்சிகளும்..
காதலும் ( "காதலென்ற ஒற்றை வார்த்தையில் அடங்கிவிடுவதல்ல அது!" )
எங்களுக்கானது.. எங்களுக்கானதே..!
நன்றி உயிரோசை..
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
அருமை முருகேசன்
நல்ல கவிதை படித்தேன்
வெகு அருமை முருகேசன்:)
நேசப்பரிபாஷை நல்லாருக்குங்க ஆறுமுகம்.
நேசனோட பரிபாஷையையும் கேள்விப்பட்டேன். சென்னையே அதிர்ந்ததாமே.
கலக்குங்க மக்கா.
அழகான வரிகள் கோர்த்த கவிதை.
கவிதை அருமை ஆனா ரூனா.
/கடல்மேல் பறவையாகும் வானம்!/
இந்த வரியிலேயே சொக்கி நின்னுட்டேன் கவி....
அருமையான கவிதை படித்தத் திருப்தி...
ரொம்ப நல்லாருக்கு மாப்ள.
மிக அருமையான கவிதை. வாழ்த்துகள்
அருமை அண்ணா
//எங்களுக்கானது.. எங்களுக்கானதே..! //
மிகவும் பிடித்திருக்கிறது நண்பா
Post a Comment