மழைநேரத்துக் குடைக்கும்
வெயில்மதிய நேரத்துக் குடைக்கும்
வெயில்மதிய நேரத்துக் குடைக்கும்
தயங்கித் தயங்கி..
செதிலுரிகிறது வார்த்தைகள்,
பரிசுத்தமான கூடலுக்கு !
செதிலுரிகிறது வார்த்தைகள்,
பரிசுத்தமான கூடலுக்கு !
பிறிதொரு பரிச்சயப் பொழுதில்..
நிர்வாணம் உச்சிமுகர் சொல்லாடலில் தழைக்கும்,
இந்நொடிவரை யாதொரு பிசிபிசுப்புமின்றி
மருகி அசைகிறதொரு நிலாவிளக்கு !
தயங்கித் தீர்ந்த கற்பனைக்கடலில்
தங்கமீன்நிற இரு பறவைகளின்
வெட்க மௌனங்களும்
முழுமையாய் இசைக்கத் துவங்க,
அப்பேரலையின் வெளியெங்கும்
இயல்பானதொரு படுக்கையறைக் காட்சி !
எங்கோ ஒரு படுக்கை புணர்ச்சி கழிந்து
புன்னைகையோடு விடுபடலாம்.
நன்றி உயிரோசை..
11 comments:
-:)
நல்லாருக்குங்க முருகேசன்
இயற்கையின் ஊடே மெல்லிய உணர்வு நம்மை பயணிக்க வைக்கிறது.. அழகாய் ஒரு அனுபவம்.
யோவ் ஆனா ரூனா எப்படியா இருக்கீரு...
ஊருக்கு போய் பொண்ணு பாக்குறதை விட்டுட்டு இன்னும் கவிதையா?
ஆனா அருமையா எழுதியிருக்கீங்க.
என்ன கவிஞரே, விடுமுறையை எல்லாம் எப்படி போகின்றது, அக்பர் சொன்னது
இப்ப வாய்ப்பு இல்லை. மாற்றங்கள் எதும் உண்டா? எதில் என்று உங்களுக்கு
புரியும்.
//மாற்றங்கள் எதும் உண்டா? எதில் என்று உங்களுக்கு
புரியும். //
எனக்கு புரிஞ்சு போச்சு. எனக்கு புரிஞ்சு போச்சு.
சவுதி சரக்கை விட. இந்திய சரக்கு நல்லாயிருக்கு(ம்). கவிதையை சொன்னேன் :)
செதிலுரிகிறது வார்த்தைகள்,
பரிசுத்தமான கூடலுக்கு //
அற்புதம் வேறென்ன சொல்ல !!!
//மழைநேரத்துக் குடைக்கும்
வெயில்மதிய நேரத்துக் குடைக்கும்
இடையானதொரு மெல்லிய ஊடலாய்,//
மிக ரசித்தேன் இந்த வரிகளை
//அப்பேரலையின் வெளியெங்கும்
இயல்பானதொரு படுக்கையறைக் காட்சி//
இந்த வரிகள் தரும் இதமான காட்சியில் தங்கி போகிறது மனம்
அருமை நண்பரே
நல்ல கவிதை
கவிதை ரொம்ப நல்லா இருக்கு நண்பா...
போன் பண்ணற நேரம் பிக்அப் பண்ணலை பாருங்க.
Post a Comment