ஆசிரியர் மனுஷ்ய புத்திரனுக்கு என் அன்பின் வாழ்த்துக்கள்.. நூறாவது இதழாக இவ்வார உயிரோசை..!
ஆயாசமாய் பகலை அள்ளிவிழுங்குமாறுயிருந்த சூரியன்
குறிப்பிட்டதொரு குறிப்புணர்த்துவதாக சிலாகித்து,
பின்அதில் தொடர.. எதன்பொருட்டோ லயிப்பற்று,
காற்றசைக்கும் மரஇலையின் திசையில்
வெகுதொலை பறப்பதாயொரு முடிவுக்குவந்து..
பின்தொடர் பறவையொன்றின் இறகில்
காற்றசைக்கும் மரஇலையின் திசையில்
வெகுதொலை பறப்பதாயொரு முடிவுக்குவந்து..
பின்தொடர் பறவையொன்றின் இறகில்
கிட்டாதிருந்த கவிதைக்கான
வார்த்தைகளேதும் சொட்டிவிடாதா..
யென்றவொரு கொதியோடு
மனம்புரளும் கொள்ளாத இருப்பில்,
மனங்கொத்திமீனாக வந்துவிடுகிறது
புட்டிவரை கூந்தலுடைய அப்பிசாசின்
உயிர் உறிஞ்சும் கண்கள் !!
நன்றி உயிரோசை..
17 comments:
கவிதை அருமை.வாழ்த்துக்கள்
வாழ்த்துக்களும், பாராட்டும்
பொப் சொன்னால் சூப்பர்
மெய் சொன்னால் எங்கே எமது கவிதை ?
வாழ்த்துகள் நண்பா.
உண்மையில் நீங்களும் உங்கள் கவிதையும் எனக்கு எப்போதும் ஆச்சர்யம்தான்.
இத்தனை அழகான எழுத்துக்கு சம்மந்தமேயில்லாத மனிதனாக நேரில் எப்படி ஐயா இருக்க முடிகிறது.
வியாழன் இரவு மீண்டும் சந்திக்கலாம். நன்றி.
நன்றி சரவணன்.
நன்றி செந்தில் சார்.
@நேசன்..
நண்பா நீங்க உண்மையையே சொல்லுங்க.. அதுதான் எனக்குப் பிடிக்குது, எனக்கு பயனுள்ளதாகவும் இருக்குது..:)
நன்றி நண்பா..
நன்றி சரவணன் அண்ணா.
பெரிய பெரிய வார்த்தை எல்லாம் சொல்லாதீங்க அண்ணா..
சந்தோசமாக இருக்கிறது :)
கண்டிப்பாக சந்திக்கலாம்.. சங்கரையும் அழைத்தாகி விட்டது.
மீண்டும் ஒரு நல்ல இரவிற்கான காத்திருத்தலோடு. :)))
கவிதை ரொம்ப நல்லாருக்கு..
//உயிர் உறிஞ்சும் கண்கள் !!/// அழகு.
கவிதை நன்றாக உள்ளது, வாழ்த்துக்கள்.
உயிரோசையில் படித்தேன் நண்பரே. சொற்கள் ஆழமாகவும் அழகியலுடன் வந்து சேர்கின்றன உங்களுக்கு. வாழ்த்துகள்
தொடருங்கள் நண்பரே
அழாகாக வரிகளைக் கோர்த்தெடுக்கிறீர்கள் ஆறுமுகம்.
//பின்தொடர் பறவையொன்றின் இறகில்
இரவைக் கொண்டுவரும் நிலவின் நுனிமூக்கில்//
ரசித்தேன்.
//பின்தொடர் பறவையொன்றின் இறகில்
இரவைக் கொண்டுவரும் நிலவின் நுனிமூக்கில் //
செரிவு. இந்த கவிதையை நாலு கவிதையா எழுதி இருக்கலாம்.
நன்றி ஸ்டார்ஜன் அண்ணா.
நன்றி இளம்தூயவன் சார்.
மகிழ்வு.. நன்றி நண்பர் வேல்கண்ணன்.
ம்,சந்தோசம்..நன்றி தோழி ஹேமா.
!!
பாராட்டிற்கு நன்றி லாவண்யா அக்கா.
கவிதை அருமை
ரொம்ப பிடிச்சிருக்கு மாப்ள! வாழ்த்துகள்!
Post a Comment