கடைசி உரையாடலின் மௌனங்கள்
பழையடைரியை வாசித்துக்கொண்டிருக்கிறது..
யாதொரு முன்முடிவகளுமற்று..
சமயங்களில்
மறுசந்திப்பிற்கான உத்தியெனவும்
ஓர் உறவு மருகுகிறது
மௌனங்களின் கூர்ப்பக்கங்களில்..
ஒரு தேநீர் மாலையும்
இரு காலி இருக்கைகளும்
நமக்கான முடிவில்,
முந்தைய நமது பிரிவுநாட்களை
யொத்த அதே ஈடுபாட்டின்
நகம் கடித்தலோடு.!
18 comments:
நல்லா இருக்கு நண்பா
முடிவுகள் ?தானே //முன்முடிவகளுமற்று//
ம், அதுதான் "யாதொரு தீர்மானங்களற்று"
நன்றி நண்பா :)
/ஒரு தேநீர் மாலையும்
இரு காலி இருக்கைகளும்
நமக்கான முடிவில்,
முந்தைய நமது பிரிவுநாட்களை
யொத்த அதே ஈடுபாட்டின்
நகம் கடித்தலோடு.! /
ஆஹா!அருமை!
தொடந்து விவாதித்து கொண்டே இருக்கிறது கவிதை.
அருமை
கடைசி உரையாடலின் மௌனங்கள் கொடுமையானது !
'ஞாபகத்தில் அலையும் வரிகளில்' எனது நி.க. வரிகள் இடம் கொடுத்தமைக்கு நன்றியும் அன்பும்
நண்பா
very nice........
நன்றாக உள்ளது ஆறுமுகம். வியாழன் ஸ்பெஷல் எப்படி?
அருமை ஆறுமுகம்.
நன்றி அன்புடன் அருணா.
நன்றி நண்பர் வேல் கண்ணன்.
ம், கற்பனைகளுக்குத் தெரிய வாய்ப்பில்லையோ..!
நன்றி தோழி ஹேமா.
நண்பா, உங்களது நிர்வாணத்தைக் கவனித்தலில் நான் லயித்து உயிர்ப்பித்தேன் என்னை..
நன்றி :)
நன்றி நண்பர் ஜோயெல்சன்.
நன்றி இளம் தூயவன் சார்.
வியாழன் ஸ்பெஷல், மிகுஅன்பின் போதையில், எரிசாராயத்தின் வெட்கையில்.. சின்ன சின்னக் குழந்தைகளின் விசித்திர கேள்வி பதில்களை யொத்த சந்தோஷ தருணம் ஆக்கியது எங்கள் அனைவரையும்.. (உங்களைத் தவறவிட்டதில் குழந்தைகளுக்கு வருத்தமே)
நன்றி அக்பர் அண்ணா.
நல்லா இருக்கு
நன்றி கார்த்திக்.
கவிதை நல்லா இருக்கு
Post a Comment