Monday, July 19, 2010

பட்டாம்பூச்சியின் சிறகு உதிர்க்கும் வர்ணநிழல்..



புழுக்கள் ஊரும் சதையென
நெளியத் துவங்கும் இரவின் முகமெங்கும்
ஒரு பைத்தியக்காரப் பட்டாம்பூச்சியினைப் போல
பறக்கத் துவங்கிய அந்த மாயநொடியில்
தனிமை உண்பவன் எழுதப்படுகிறான்
புனைவைப் புசித்து ..

புரிதலின் செய்கைகள்
விழுந்து நொறுங்கிய பீங்கான் சீசாவாகி
தின்னத் தருகிறது மனமீன்களை
படுக்கை அறையில் விழுந்து கிடக்கும்
அடர்மௌன நிழலுக்கு.. 

ஒரு tumbler கடலும்

உள்ளங்கை size நிலவுத்துண்டும்

இதழ் விரியத்துடிக்கும் roseபூவும் 
உங்களுக்கென உமிழத் துவங்குகிறதது
மனமீன்களைக் கொத்தி தின்ற நிழல்!
      
உங்களில் யாவரும் பருகி
அன்பைக் கொண்டாடுங்கள்.. 
அன்பின் கட்டடங்கா போதையில் மிளிருங்கள்..

என் தனிமை எனக்குப்
போதுமானது. 


நன்றி உயிரோசை..

21 comments:

Unknown said...

ஒரு கோப்பை மதுவுடன் உங்கள் கவிதையில் நான்...

ச.முத்துவேல் said...

நல்லாயிருக்கு. தலைப்பைப் போலவே

தூயவனின் அடிமை said...

நன்றாக உள்ளது. ஆங்கில வார்த்தைகளை கொஞ்சம் தவிர்த்து இருக்கலாமே நண்பரே.

VELU.G said...

//என் தனிமை எனக்குப்
போதுமானது.
//

சரியான வரிகள் மிக ரசித்தேன்

அன்புடன் அருணா said...

நல்லாருக்கு!

ராஜவம்சம் said...

தனிமையை விட நன்பர்களுடன் அரட்டை இன்னும் சந்தோஸமாக இருக்கும்.

vasu balaji said...

அருமை:)

செ.சரவணக்குமார் said...

தலைப்பைப் போலவே கவிதையும் அருமை.

தொடருங்கள் ஆறுமுகம்.

Unknown said...

*அடடா, அன்பைக் கொண்டாடத் துவங்கிட்டீங்களா செந்தில் சார்.. :)
நன்றி.

*நன்றி ச.முத்துவேல் சார் :)

Unknown said...

*ம், சரி தான்.. அப்படியொரு இருத்தல் இங்கே அமையவில்லையே!
நன்றி ராஜவம்சம் :)


*நன்றி வானம்பாடிகள் சார் :)

Unknown said...

*நன்றி இளம்தூயவன் சார் :)

என்னவோத் தெரியில,அங்க ஆங்கில வார்த்தைகளை உபயோகப் படுத்தனும்னு ஒரு தோணல்!

*வேலு.ஜி.
உங்களது ரசனைக்கு நன்றி சார் :)


*நன்றி அன்புடன் அருணா :)

Unknown said...

*நன்றி சரவணக்குமார் அண்ணா :)

சிநேகிதன் அக்பர் said...

நல்லாயிருக்கு ஆறுமுகம்ஜி.

ஹேமா said...

தேவைக்கேற்றபடி ஆங்கில வார்த்தைகளோளோடு கவிதை தனிமை தவிர்க்கிறது இந்த நேரத்தில்.இரவு 11.40.

Unknown said...

*நன்றி அக்பர்ஜி :)

Unknown said...

:)
நன்றி தோழி ஹேமா.

Ahamed irshad said...

நல்லாயிருக்கு..

rvelkannan said...

//என் தனிமை எனக்குப்போதுமானது//
இந்த வரியிலும் தலைப்பிலுமே கவிதை ஆயிரம் சொல்கிறது சிறப்பு. அருமை நண்பரே

பா.ராஜாராம் said...

ரொம்ப நல்லாருக்கு 'உயிரோசை' மாப்ள. :-)

Unknown said...

*நன்றி அஹமது இர்ஷாத்.

*நன்றி நண்பர் வேல்கண்ணன்.

*நன்றி மாமா.

உயிரோடை said...

வாழ்த்துகள்