Saturday, July 17, 2010

முன்முடிவுகளைக் கைப்பையில் ஒளித்துவைத்திருத்தல் உகந்ததல்ல...




மனதை திடப்படுத்திக் கொண்டு
நகரத் துவங்கியது மழை.
தவளைகள் பரிகாசிக்க ,
நட்சத்திரங்களென
வாய்நிறைய அள்ளிவந்தது வானம்
அது விதண்டாவாதங்களின்
வெற்றுக்கூடுகளென அறியாது..!

மழை நகர்ந்து
வெகுதொலை கடந்தும்
தவளைகளும், வானமும்
பார்வை பரிசோதிப்பற்று
முட்டியவாறேப் பிய்த்துக் கொண்டிருந்தன
சாக்கடைக் கதவினை
மழையென உருவகித்து..

பின்னொரு பொழுதில்
மழைபெய்யத் துவங்கியது
மழையாகவே..!
தவளைகள்
யாதொரு அறிவிப்புமின்றி
காணாது போயிருந்தன...

14 comments:

Joelson said...

எனக்கு புரிதல் கிட்டவில்லை நண்பரே விளக்கம் கொடுத்தல் மகிழ்வேன்

நேசமித்ரன் said...

Nice one !

keep going

தூயவனின் அடிமை said...

அருமையாக உள்ளது.

சிநேகிதன் அக்பர் said...

நீங்க மட்டும் கையில கிடைச்சீங்க......

கை கொடுக்கலாம் :)

Unknown said...

*நன்றி Joelson

[மழை=படைப்பு
தவளைகள்=விமர்சகர்கள்
வானம்=படைப்பாளி]

Unknown said...

*நேசன்
நன்றி நண்பா.

*நன்றி இளம்தூயவன் சார்.

Unknown said...

*அக்பர் அண்ணா

ஓ தாரளாம கை கொடுக்கலாமே.. சீக்கிரம் வரேன் அங்க :)

நன்றி அண்ணா.

ஹேமா said...

தலைப்பிலேயே கவிதை சொல்லியிருக்கீங்க.ரசித்தேன்.

rvelkannan said...

கவிதை அருமை வாழ்த்துகள்

Unknown said...

*நன்றி தோழி ஹேமா.

*நன்றி நண்பர் வேல்கண்ணன்.

கமலேஷ் said...

கலக்கிடீங்க நண்பா..

Joelson said...

உங்களின் தெளிவுரைக்கு பின் தெளிந்தேன் நன்றி

Unknown said...

*நன்றி நண்பர் கமலேஷ்.

*நன்றி நண்பர் ஜோயெல்சன்.
:)

உயிரோடை said...

மீண்டும் மீண்டும் தவளைகள் மழை என்று வருவது போல இருக்கு. தலைப்புக்கும் கவிதைக்குமிருக்கும் சம்மந்தம் புரியவில்லை