Monday, July 12, 2010

எழுத வாய்க்காத இரவொன்றில்..



சலனமற்றுக் கிடந்த தலையணையில்
சட்டென வந்திறங்கியது
எனக்கு மிகப்பிடித்த
ஒரு ரயில் பெட்டியும்
ஒரு மழை வண்டியும்..

கனவுகள் காண வலுவற்றிருந்த
எனது இரவுகள்
இக்கடைசி வானத்தைக்
கொண்டாடத்துவங்கியது,
தனிமைநாற்றம்

கடலில் விழுந்த நட்சத்திரங்களின் வாசமென

மாறிப்போனது..

ஒரு மிகுஆசுவாசம்
நான் ஒற்றையான அறையெங்கும்
மெல்லப் படர்ந்து
என்னைக் கட்டிக்கொண்டது..

இனி ,
ஒரு குழந்தையின் மென்சிரிப்பாக
ஒரு பதின்வயதுப் பெண்ணின் முதலுதிர சந்தோசமாக
முதல் குழந்தைக்குத் தாயான ஒரு பெண்ணின் முகமாக
தனதான பெண்ணின் மிகுஅன்பில் ஒரு ஆணின் வெட்கமாக
தைரியமாய்
சப்தமாய்
யாவரிடமும் தெரியப்படுத்தப்படும்..

எனது டைரி நிரம்புகிறது..

யாரும் என்னைத் தடுக்கப்போவதில்லை 
அறை எண் 7ல் நான் மட்டுமே

தற்கொலைக் குறிப்பெழுதுகிறேன்.!



நன்றி உயிரோசை..

12 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

ஒவ்வொரு வரியும் ஒரு கதை சொல்கிறது மிகப்பிடித்த கவிதை...

பா.ராஜாராம் said...

அபாரம் மாப்ள!

இன்று வாசித்த மிக சிறந்த கவிதை இது. யோவ், ena azhaitthu tholodu kattik kolla thonum tharunam இது.(rendu naalaave translation piracchinaiyaa irukku மாப்ள.)

ஹேமா said...

தனிமை தரும் கற்பனையும் அது தரும் தற்கொலைக்கான ஆயுதங்களுமாய் விரிந்து நிற்கிறது கவிதை.ஆசுவாசப்படுத்தவே அதிக நேரமெடுக்கிறது !

மங்குனி அமைச்சர் said...

nice one

VELU.G said...

மிக அருமை

உயிரோடை said...

ரொம்ப நல்லா இருக்கு கவிதை

rvelkannan said...

மென் கதையில் ஆரம்பித்து ... வன்கவியில் முடியும் இந்த குறிப்பு கனக்கிறது நண்பரே

Unknown said...

நன்றி நண்பர் வசந்த்.

நன்றி மாமா பா.ரா.

நன்றி தோழி ஹேமா.

Unknown said...

நன்றி மங்குனி அமைச்சர்.

நன்றி நண்பர் வேலு.

Unknown said...

நன்றி லாவண்யா அக்கா.

நன்றி நண்பர் வேல்கண்ணன்.

Unknown said...

அழகான கவிதை ஆறுமுகம் முருகேசன். ஒவ்வொரு வரியும் அருமை

Unknown said...

//முதல் குழந்தைக்குத் தாயான ஒரு பெண்ணின் முகமாக
தனதான பெண்ணின் மிகுஅன்பில் ஒரு ஆணின் வெட்கமாக //

அருமையான வரிகள், மிகவும் ரசித்தேன்