இன்னும் எத்தனை நட்சத்திரவானுக்குப்
பின், அவளது சேகரித்த முத்தங்கள் மீளுமோ.
ஓராயாச எதிர்நோக்கலில்
குருவாளின் சொச்ச குருதியும்
கனவறை பருக,
கடல் குடிக்கும் உப்பாயுறைகிறது மீன்.
உடைந்த நிலா
ஆசைபௌர்ணமிக்கென வளர்வதாய்
மிகுலெகுவாய் விரல்நீட்டும் வானத்தில்
நிஜ நிழல்கள் இதுவரை எங்குமில்லை
யென்பது எத்தனை பேருக்குத் தெரியவருமோ.
நிஜ நிழல்கள் இதுவரை எங்குமில்லை
யென்பது எத்தனை பேருக்குத் தெரியவருமோ.
வயதினை வயதே குடித்தலென்பது
நீர்தேங்கி யழுகிய வேரிலொட்டிய
மண் எனலாம், சற்று குரலைக் குறைத்து.
அர்த்தமற்றதனிமைக்கு இளமை இரையாகிறது
மரமில்லா ஒடிந்த கிளையென.
இரவோடு இரவாக
புகைமாண்ட அழுக்கு அறையில்
துவம்சமாகிறதொரு ஒற்றைக் காமமும்
உயிர் உருகும் காதலும் .
16 comments:
"அர்த்தமற்ற தனிமைக்கு" நான் ரசித்த இடம் ..
புரிகிறது. இயலாமையின் இயல்பான பிரதிபலிப்பாக இருக்கிறது.
அருமை ஆறுமுகம்.
ஒடிந்த கிளையும்
அர்த்தமற்ற தனிமையும்
வரிகளுக்குள் அடர்த்தியாய்.
இன்னும் தனிமைப்படுத்துகிறது.
குருவாளின் ?
லெகு எனபதல்ல இலகு என்பதுதான் சொல் என்று நினைக்கிறேன்(சென்ர கவிதையிலும் பயனுற்றிருந்தது இச்சொல்)
கடல் குடித்த ?
கவிதையின் மொழியில் நல்ல மாற்றம் நண்பா
தொடர்ந்து எழுதுங்க :)
//இரவோடு இரவாக
புகைமாண்ட அழுக்கு அறையில்
துவம்சமாகிறதொரு ஒற்றைக் காமமும்
உயிர் உருகும் காதலும்//
ரொம்ப பிடிச்சிருக்கு ஆறுமுகம்.
உங்கள் முதல் வருகைக்கு நன்றி செந்தில் சார்.
நன்றி அக்பர் அண்ணா.
நன்றி தோழி ஹேமா.
@ நேசமித்ரன்
ம்..பிழைகளை குறைக்க முயற்சி பண்ணுறேன் நண்பா..
/கவிதையின் மொழியில் நல்ல மாற்றம் நண்பா /
ம்ம்.. மொழி உங்ககிட்ட இருந்தும்தான் பழகிட்டு இருக்கேன் நண்பா.. இன்னும் நிறைய கத்துக்க வேண்டி இருக்கு.! :)
நன்றி சரவணக்குமார் அண்ணா.
மிக அடர்வான கவிதை. இதில் செரிவிற்கு இரண்டு மூன்று கவிதையாக்கி இருக்கலாம்
//இன்னும் எத்தனை நட்சத்திரவானுக்குப்
பின், அவளது சேகரித்த முத்தங்கள் மீளுமோ//
//வயதினை வயதே குடித்தலென்பது
....மண் எனலாம், சற்று குரலைக் குறைத்து//
ரொம்ப பிடிச்சது.
பகிர்வுக்கு நன்றி லாவண்யா அக்கா.
உங்கள் முதல் வருகைக்கு நன்றி கீதா. :)
////உடைந்த நிலா
ஆசைபௌர்ணமிக்கென வளர்வதாய்
மிகுலெகுவாய் விரல்நீட்டும் வானத்தில்
நிஜ நிழல்கள் இதுவரை எங்குமில்லை
யென்பது எத்தனை பேருக்குத் தெரியவருமோ.//
கவிதை மிகவும் அருமை . அதிலும் இந்த வார்த்தைகளும் அதன் பொருளும் இன்னும் கவிதைக்கு அழகு சேர்க்கிறது . பகிர்வுக்கு நன்றி
/*****அர்த்தமற்றதனிமைக்கு இளமை இரையாகிறது
மரமில்லா ஒடிந்த கிளையென*****/
Nice Line about loneliness...
நன்றி சங்கர்.
உங்கள் முதல் வருகைக்கு நன்றி சரவண வடிவேல்.
//இரவோடு இரவாக
புகைமாண்ட அழுக்கு அறையில்
துவம்சமாகிறதொரு ஒற்றைக் காமமும்
உயிர் உருகும் காதலும் .
//
அருமை நன்பரே
வரிகளிலே துவம்சமானேன்
Post a Comment