Thursday, July 22, 2010

அரேபிய ராசாக்கள் 12..



கூழாங்கற்கள் தடாகத்தில்
பிறிதொரு கால்களை யோசித்ததாக
குனிந்து முள்ளெடுத்து அதையோரமாய்
விட்டுச்செல்கின்றதொரு கை!

தொலை பயணங்களுக்கு..
காரணங்களென்னவாக யிருக்கமென்ற
யாசிப்பிலொரு கை
எதையோ விட்டுச்செல்வதாய்
நீள்கிறது இலக்கின்றி என் கணம் !

ஒருவன் வண்ணம் தெளிக்கின்றான்,
இன்னுமொருவன் அதை பற்றிக்கொள்கின்றான்,
இப்படியாகத்தான் சுழற்சியில் வாழ்வு..!


நன்றி வார்ப்பு..

25 comments:

உயிரோடை said...

நல்லா இருக்கு கவிதை. வாழ்த்துகளும் கூட

TAMILAN said...

வாழ்த்துக்கள்

Ashok D said...

நல்லாயிருக்குங்க.... :)

சிநேகிதன் அக்பர் said...

நல்லாயிருக்கு கவிஞரே.

( நம்மளப்பத்திதான் எழுதியிருக்கியிளோ )

Thenammai Lakshmanan said...

மிக அருமையான கவிதை ..வாழ்த்துக்கள்..

கமலேஷ் said...

நல்லாயிருக்கு கவிஞரே...

நேசமித்ரன் said...

இன்னும் கொஞ்சம் செம்மைப் படுத்தி இருக்கலாம் நண்பா

என்னவோ மிஸ்ஸிங்

ஹேமா said...

நேற்றே வாசித்தேன் இந்தக் கவிதை வார்ப்பில்.பாராட்டுக்கள்.

Joelson said...

நல்லா இருக்கு கவிதை.

Starjan (ஸ்டார்ஜன்) said...

கவிதை ரொம்ப நல்லாருக்கு.

Unknown said...

நான் பற்றிகொள்கிறவனாகத்தான் இருக்கிறேன் எப்போதும்

தூயவனின் அடிமை said...

நன்றாக உள்ளது தொடருங்கள்.

Unknown said...

நன்றி லாவண்யா அக்கா.

உங்களது வருகைக்கு நன்றி தமிழன்.

நன்றி நண்பர் அசோக்.

Unknown said...

நன்றி அக்பர் அண்ணா(ம்,அப்படியும் வைத்துக் கொள்ளலாம்!)

Unknown said...

உங்களது வருகைக்கு நன்றி தேனம்மை அக்கா.

நன்றி நண்பர் கமலேஷ்.

Unknown said...

ம், உங்களை அதிகமாக விரும்புகிறேன் நேசன்.!
நன்றி நண்பா.

Unknown said...

அப்படியா! நன்றி தோழி ஹேமா.

நன்றி நண்பர் ஜோயெல்சன்.

நன்றி ஸ்டார்ஜன் அண்ணா.

Unknown said...

ம், அது வருந்தத்தக்க செயலொன்றும் இல்லையென்பதும் செந்தில் சாருக்குத் தெரியுமென்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

நன்றி சார்.

Unknown said...

நன்றி இளம்தூயவன் சார்.

Karthick Chidambaram said...

//ஒருவன் வண்ணம் தெளிக்கின்றான்,
இன்னுமொருவன் அதை பற்றிக்கொள்கின்றான்,
இப்படியாகத்தான் சுழற்சியில் வாழ்வு..! // உண்மை நண்பரே.

சில நேரங்களில் தெளிக்கிறேன் சில நேரங்களில் பற்றிக்கொள்கின்றான்

அ.வெற்றிவேல் said...

அன்பு நண்பருக்கு..

நல்ல கவிதை.. ஆனாலும் இது இன்னும் கொஞ்சம் செப்பனிட்டிருக்கலாம் என நினைக்கிறேன்.. கவிஞர் நேசமித்திரனின் கருத்துடன் எனக்கு முழு சம்மதம் ..வாழ்த்துக்கள்

Unknown said...

பொதுவாக அப்படித்தானே கார்த்திக். நன்றி.

Unknown said...

(அன்பு நண்பருக்கு..!!) ம் அப்போ நண்பர் என்றே நானும் அழைக்கிறேன்.:)

சரியா சொல்லியிருக்கீங்க வெற்றிவேல் .. எனக்கும் அதில் உடன்பாடு. நன்றி :)

இந்திரா said...

வாழ்க்கை சுழற்சியின் தத்துவம்,
அருமை நண்பரே.

இந்திரா.
(தீவு.கோம்) .

Unknown said...

நன்றி சூரியன்.