Tuesday, November 3, 2009
கற்பனை காதலிக்கு..2
அவளுக்கு நடனம்..
எனக்கு அவள்..
மௌனமாய் காதல் !!
இம்முறை நான் ஆண் ,
அடுத்தமுறையும் நான் ஆணாகதான்..
நீ பெண்ணாகவே வாழ் ; சாகாதே !!
காதலிச்சா கவிதை வருமாம்
வா , பெண்ணே...
ஒருமுறை முயன்று பார்ப்போம் !!
கூச்சமென்று சொல்லி
காதல் தவிர்க்காதே ,
என்னிடமும் கொட்டிகிடக்குது..
பூந்தொட்டி நிறைய கூச்சம் !!
இரவும் விடியலும் கூடுது
நான் மட்டும் அறியாது
தொடருது இந்த வாழ்வு..!!
என்னைபோலவே ..
நீயும் என்னை
தாராளமாய் காதலிக்கலாம் !!
அவள் வெட்கங்கள்
நிர்வாணமாய் நிற்க
அறிவிப்பாகிறது ..
இது காதல்தானென !!
பின்புறமாய் வந்து
கண்களை மூடுகிறாள் ;
கண்டிப்பாய் ..
இது அவள்தான் !!
நான் ராட்சசனாகி
அவள் தேவதையாகி
விருப்பங்களெல்லாம் ஒருபுள்ளியிலாகி
வளர்கிறது காதல் !!
நாளுக்கு ஒரு முறையேனும்
என்னை இறுக்கமாய் கட்டிக்கொள்
நானும் கொஞ்சமாவது
அழகாகி வாழ்கிறேன் !!
வேடிக்கையாய் ஊடல்கள்
சிறகு விரிக்க
காதல் மழலைமொழியாகிறது !!
விரல்களின் தழுவலோடு
முத்தங்கள் துவங்கும் பொழுதினில்
மூச்சுவிடுகிறது காதல் !!
தன் பெண்மை
சிலாகிக்கும் தருணம்
ஆண்மை குறுநகையுடன்
அவளை கட்டிக்கொள்கிறது..!!
ஒவ்வொருமுறை
நம்சந்திப்பின் பிற்பொழுது
கண்ணாடி கைகுலுக்குகிறது ..
நானும் அழகாகி வருகிறேனாம் !!
மழைநின்ற வானம்
முன்னைவிட அழகு ;
கைகள்கோர்த்து வெட்கத்தில் காதல் !!
மாலையிலொறு விடைதருகிறாள் , பார்க்கலாம்..
மறுநாளுக்காக இன்றே தேடுகிறேன்
எங்கே நானென !!
கவிதையென்று ; காதலுக்கு தர
விழிமூடி யோசித்திருந்தேன் ..
கவிதை முடித்துசெல்கிறாள் ,
இலேசாய் உதடுகளிட்டு
காதுகளில் ரகசியமொன்று..!!
எழுத்துகளை கோர்வைபடுத்த
படாதபாடுபடுகிறேன் ;
என் காதலைபோலவே !!
கவிதையின் மிச்சமாகியோ
இரவின் எச்சமாகியோ
இனியும் உறங்காமல் காதல் !!
அவளொரு நடனக்காரி
நானொரு கவிதைபொய்யன்
இவ்விரண்டு வரிகளினில்
மழலை புன்னகையாய் தவழ்கிறது
இப்போதைக்கு காதல்.!!
என் கற்பனை காதலிக்கு தமிழ்வாசிக்க தெரியுமேயானால் ஒருவேளை அவளும் வெட்கம் கொள்வாளோ என்னை போல..!
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
நல்ல கவிதை...உங்களை பற்றி எழுதீருக்கும் இடத்தில் சின்ன மாறுதல் செய்யலாமே...இது என்னுடைய கருத்து...பிடித்திருந்தால் மாற்றலாம் :)
நன்றி.. ம்ம்.., உங்கள் விருப்பத்திற்கிணங்க மாற்றம் செய்தாகிவிட்டது..:)
என் கற்பனை காதலிக்கு தமிழ்வாசிக்க தெரியுமேயானால் ஒருவேளை அவளும் வெட்கம் கொள்வாளோ என்னை போல..! ///
ஒவ்வொரு பத்தியையும் அலச காதல் தான் வருகிறது..
முழுமையான ஒரு காதல் உணர்வு....
Post a Comment