Tuesday, July 21, 2009

ப்பிரியமுள்ள அப்பாவுக்கு...












முயன்றவரை
முத்தங்கள் கேட்பாய்
இயன்றவரை
இனிப்புகள் வாங்குவேன்...

நான் அழுது அடம்பிடிக்கும்போதெல்லாம்
காகிதங்கள் பல
கப்பல்களாக மாறும் உன்னால்...

கடற்கரையோரமாய்
விரல்பிடித்து அழைத்து செல்வாய்
கைகள் உதறிவிட்டு
நுரைகளோடு விளையாட ஓடுவேன்...

அலைகளின் பயத்தில்
அளவு பொருந்தாத
உன் பாதங்களை
கட்டிக்கொள்வேன்...

நம்மைபோல சிநேகிதர்களோ
நதியும்
காலமும்?!...

நண்பர்கள் உலகறிய
உனைகடக்கும் எனக்கு
அதிகபட்ச தண்டனையாக
காந்திதாத்தா சிரிக்கும்
காகிதங்கள் சிலதருகிறாய்...

ஆசிரியருடனான நட்பு
காதலியுடனான கருத்துவேறுபாடு
இன்னும் இன்னும் நீண்டுகொண்டே
அழகாய் பகிர்ந்து கொள்கிறாய்...

நானும் இன்று
பணியாளனாக
தகப்பனாக...

எங்கு சுற்றியும்
எதோவொன்று உள்மனம் தேடிக்கொண்டு
உன்னிடமே திரும்ப செய்கிறது...

இன்றைய கவர்ச்சி யுகத்தில்
எனது மகனும்
மகனாகவே வளர
உன்னிடமே பணிக்கிறேன்
தொடர்ந்துகொள் உன் தோழமையை....!

5 comments:

Anonymous said...

"அலைகளின் பயத்தில்
அளவு பொருந்தாத
உன் பாதங்களை
கட்டிக்கொள்வேன்..."
உணர்ச்சிகளின் உன்னதம் என் தந்தையை நினைவு படுத்துகிறது.

Unknown said...

மகிழ்ச்சி.. :)

நன்றி nafil ..

Senthilkumar said...

முயன்றவரை
முத்தங்கள் கேட்பாய்
இயன்றவரை
இனிப்புகள் வாங்குவேன்...

-- Oru Hycoo kavithai pola arumaiya irukku...
padikkap padikka virikirathu appaavai ulladakkiya veli...

Unknown said...

நன்றி நாவிஷ் செந்தில்குமார்.. :)

ஜெயசீலன் said...

உங்களின் கவிதயிநூடே என் தகப்பனைப்பற்றிய நினைவுகள் தித்திக்கின்றது.... அருமையான கவிதை... வாழ்த்துக்கள்...