அதி அற்புத மலரொன்று
பனிக்காலத்தை இப்பனிக்காலத்தை
ஜென்ம சாபல்யக் கனவின் நிஜ மொழியில்
வசீகரிக்கிறது
முடிவிலி சிறகுகள்
சூழல் பிரிவெனும் நோய்மை உடலை
ரீங்கரிக்கிறது
தட தட தடவென அடிக்கும் ஆதி மழையின்
இறகுகளடியில் நிர்வாணம்
தரித்திருக்கிறோம்
யாதுமாகி யாதுமாகி
இப்பெருங்கணம்
No comments:
Post a Comment