சொற்களின் காட்டுக்குள்
பெருந்தீயாகப் பரவுகிறாய்
உனது இருபெனும் மாயையினை
நிலைப்படுத்த.
பின்னொரு பொழுதினில்
தனிமையின் பெருங்கடலை
ஓவியமாக்க முயற்சிக்கிறாய்
எரியும் ஒற்றை அகல் வரைந்து.
முன்னெப்பொழுதோ
பெய்யாதிருந்த மழை
ருத்ரதாண்டவமென
தீபத்தை குரூரமாக விழுங்கிப்போகும்
இவ்வேளையினில்
மேலும்
அவனைப் பற்றி விரிவாக
உரையாட ஏதுமில்லை.
நன்றி உயிரோசை..
4 comments:
சிறு சிரிப்பு... மற்றும் அழகு
அருமை....
வாழ்த்துகள் ஆறுமுகம் முருகேசன்
superb da.........
Post a Comment