Wednesday, July 13, 2011

பிறகு




தற்கொலை செய்து
இரு தினங்களுக்குப் பிறகு
மிக அழகாக ஒப்பனை செய்துகொண்டு
ஒரு மெல்லிய புன்னகையோடு
வந்தமர்கிறாள் அபர்ணா.

அந்த அபத்த கனவையும்
அந்த வதையுள்ள ஏமாற்றங்களையும்
அந்த முகமூடி மனிதர்களையும்
அந்த துரோக ஊசியின் கூர்முனையையும்
அந்த நம்பிக்கையின் உடைந்த சில்லுகளையும்
அத்தனை நிதானமாகப் பேசத்துவங்குகிறாள்.

பிறகு இருவருக்குமாக
நல்ல சுவையுடைய தேநீரை
தயார் செய்கிறாள்.

நான் என் கனவின் ஓட்டைகளை
சரி செய்வது பற்றி
தீவிரமாக எண்ணத் துவங்குகிறேன்.

சலனமேதுமின்றி அவள்
என் விரல்களை கோர்த்தவாறு
தான் செத்துப் போயிருந்த தன் கனவை
சின்னச் சின்னத் துண்டுகளாக்கி
தேநீரோடு சேர்த்துப் பருகுகிறாள்.

நானும்
நானெனும் பிம்பமும்
கொஞ்சம் கொஞ்சமாக
உடைந்து சரிகிறோம்.

5 comments:

Ashok D said...

நான் படித்தவரையில் உங்கள் கவிதைகள் நிறைய எதிர்மறைகளை உள்ளடக்கியதாய் உள்ளது... (கொஞ்சம் ஜாலியாகவும் இருக்கவும் :))))


தவறாக எடுத்துக்கொள்ளமாட்டீர்கள் என எண்ணுகிறேன் :)

Unknown said...

நன்றி நண்பா.. தவறாக எடுத்துக்கொள்ள ஒன்றும் இல்லை நண்பா.. // (கொஞ்சம் ஜாலியாகவும் இருக்கவும் :)))) // கண்டிப்பா நண்பா.. :)))

ரைட்டர் நட்சத்திரா said...

பதிவுகள் அருமை தொடர்ந்து எழுதுங்கள்

Jayasree said...

May be your best one so far! Loved the mystery... perception play.. and 4th dimension!!!

Gowripriya said...

!!!!