உடலிலிருந்து உதிர்ந்து விழுந்த
நிழலை இறுகப் பற்றி
மௌனம் கலைக்கிறது
முகில்களடர்ந்த இரவு..
உயர உயரப் பறக்கவிடப்பட்ட
வண்ணத்துப்பூச்சியின் வண்ணங்களை
தன்னிடத்து வைத்திருக்கும்
மெல்லிய சிறு சிறு விரல்களைப்போல,
மகிழ்வின் ஒப்பற்ற கடலில்
மெல்ல இறங்கும் இந்தப் பௌர்ணமி நிலா
ரகசியத்து இட்டுச்செல்கிறது
அன்பின் ஒப்பத்தை.!
கூட்டத்திலிருந்து
கைகள் அள்ளிய ஒற்றை நட்சத்திரம் ,
அவளுக்கென தருகிறேன்.
நிழலென உதிர்ந்தவள்
வெட்கத்தின் புதிர் புன்னகையோடு
கட்டிக்கொள்கிறாள்
இரவு நிறைய நிறைய.!
நன்றி உயிரோசை..
1 comment:
//நிழலென உதிர்ந்தவள்
வெட்கத்தின் புதிர் புன்னகையோடு
கட்டிக்கொள்கிறாள்
இரவு நிறைய நிறைய.!//
பாவலரே உமது பா நல்ல செய்தியை பகிர்ந்து கொள்ளுகிறது உங்களின் கைகளில் விளையாடிய இந்த மலர் மணம்பரவ விழைகிறது பாராட்டுகள் தொடர்க....
Post a Comment