Friday, February 18, 2011

நிக்கோடினை உலர்த்திய புன்னகை







ஒரு பட்டாம்பூச்சிக்கு
துப்பட்டா சுற்றியது
மாதிரி இருந்தாள்
அந்தப் பள்ளிச் சிறுமி.

அவள் பென்சிலும்
ரூல்ட் பேப்பரும்
வாங்கிச் செல்லும் வரை
நிக்கோடினுக்குத் தீயிடாது
நிதானித்திருந்தேன்.

பள்ளி காம்பவுண்டினுள்
நுழைந்த பின்னான
மூன்றாவது பாதத்தில்
திரும்பியவள்
ஒரு குட்டிப் புன்னகையை
வீசியெறிகிறாள்! 



நன்றி இந்த வார ஆனந்தவிகடன்.  

4 comments:

Gowripriya said...

விகடனில் வந்ததற்கு நிறைய வாழ்த்துகள் :)))))))))))))))
கவிதை அழகு :)))௦௦௦௦௦

Gowripriya said...

பட்டாம்பூச்சிக்கு
துப்பட்டா சுற்றியது
மாதிரி இருந்தாள

:)))))

இளவட்டம் said...

Valthukkal machan....

உயிரோடை said...

விகடனில் வந்ததற்கு நிறைய வாழ்த்துகள்