கையாண்ட சொல் பிசுபிசுப்புகளை
எதைச் சொல்லி நிராகரிப்பது
என்ற ஒன்று இருந்துவிடுகிறது
அவர்களின் மௌனப்பைக்குள்
ஒரு கூர்தீட்டப்பட்ட கத்தியினை யொத்து.
மறுசந்திப்பிற்கான
ஆயத்தக்கூறுகள் நெய்து,
ஒரு விரும்பத்தகாத் தர்க்கமென
விசும்பிக் கிடக்கும் நேசத்தின்
ஆழ் மனங்களை
ஒரு கோப்பைத் தேநீரிலிட்டு
கலக்கி குடிக்கும்
அந்த ஒரு தீர்க்க முடிவினை
பரிசீலனையில் அடைத்துப் பூட்டிவைத்திருப்பதாக
ஒருவர் மாற்றி ஒருவர்
கைப்பட கடிதம் எழுதிய
அந்த ஏகாந்த வேளையில்,
ஒரு காதல்
இசைந்திருக்கிறது தான்இன்னும் இருப்பதாக.
இயலாமையின் தீயில்
அந்த ஏகாந்தவேளை எரியுமுன்,
மீள்வருகைக்கான நேச இணங்கல்
ஒன்றைத்தவிர
ஒரு கூர்தீட்டப்பட்ட கத்தியினை யொத்து.
மறுசந்திப்பிற்கான
ஆயத்தக்கூறுகள் நெய்து,
ஒரு விரும்பத்தகாத் தர்க்கமென
விசும்பிக் கிடக்கும் நேசத்தின்
ஆழ் மனங்களை
ஒரு கோப்பைத் தேநீரிலிட்டு
கலக்கி குடிக்கும்
அந்த ஒரு தீர்க்க முடிவினை
பரிசீலனையில் அடைத்துப் பூட்டிவைத்திருப்பதாக
ஒருவர் மாற்றி ஒருவர்
கைப்பட கடிதம் எழுதிய
அந்த ஏகாந்த வேளையில்,
ஒரு காதல்
இசைந்திருக்கிறது தான்இன்னும் இருப்பதாக.
இயலாமையின் தீயில்
அந்த ஏகாந்தவேளை எரியுமுன்,
மீள்வருகைக்கான நேச இணங்கல்
ஒன்றைத்தவிர
ஒரு பழைய டைரிக்குறிப்பு அதென
நீங்கள் உரக்கச் சொல்லலாம்
அல்லது
என்னைப்போல படித்துவிட்டு மூடிவிடலாம்
யாருமறியாது ரகசியமாகவும் கூட!
நன்றி உயிரோசை..
2 comments:
இவ்வார உயிரோசையில் இக்கவிதையை ரசித்தேன். இங்கும் தொடர்ந்தது மறுவாசிப்பு. நன்று தோழரே... வாழ்த்துக்கள்.
கடைசி பத்தி இல்லாமலே நன்றாக இருக்கிறது :)
Post a Comment