Wednesday, September 22, 2010
நிழலென வளரும் மரம்..!
சக்கரங்கள் சுழலும் தண்டவாளங்களில்
உருளும் இசையென
மனம் பிரள்கிறது,
நிரம்பிய குடம் உடைந்து
பூ உதிர்ந்த தருணம்..!
குளுக்கோஸ் குழல் வழி
தெம்பூட்டப்படுபவளின்
ஆழக்கண்கள் பூவை நனைக்க,
அவள் புருவங்களுக்கு மத்தியில்
உதடுகள் உப்பி நீர் பதிக்கிறான்
பூ செய்தவன்..!
புதுப் புன்னகை ஒளி
வெளியெங்கும்
நிழலென வளரும் மரமாய் !
அழுது அழும் பூவுக்குத்
தேவதைகள் கதைசொல்லத்
தழும்பும் சமயம்,
நான் கொண்டுசென்ற பழக்கூடை
சிறு சிறு வர்ண நட்சத்திரங்களை
சிறகசைத்து தருவதாகவும்
அவற்றைப் பத்திரப்படுத்தி வைக்குமாறும்
அக்குழந்தைப்பூவே சைகை செய்கிறது
பிரசவஅறை ததும்ப..!
நன்றி உயிரோசை..
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
//புதுப் புன்னகை ஒளி
வெளியெங்கும்
நிழலென வளரும் மரமாய் //
நல்லாயிருக்கு நண்பா வாழ்த்துகள்
கவிதை அருமை பல தளங்களில் பயணிக்கிறது
மிக மிக அருமை..
சுமார் 20௦ மாதங்களுக்கு முன்பு நானும் இப்படி தான் உணர்ந்தேன்...
வாழ்த்துக்கள்
அருமை...
பிரள்கிறது?
பிறழ்கிறது !
:)
ம்ம்..உயிரோசையிலேயே படிச்சேன்...
ரொம்ப நல்லா இருக்கு... பிரசவம். நிழலென வளரும் மரம்.
எறியும் மெழுகில் நனையும் இரவு....ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு...
//அவள் புருவங்களுக்கு மத்தியில்
உதடுகள் உப்பி நீர் பதிக்கிறான்
பூ செய்தவன்..!//
பூ ஈன்ற வலி உரிஞ்சவோ? எத்தனை ஆறுதல், எத்தனை நெகிழ்ச்சி! :) அருமையான கவிதை!
Post a Comment