Tuesday, September 14, 2010

மிகநெருங்கிய மரணத்தின் கசடு..



யாருமற்ற குழந்தைக்கு ஒத்தடமாய்
இந்த நகரம்
என்னைத் தெருக்களில் நடத்திக் கொண்டிருக்கிறது..

இந்தப் போதைக்கு
எனக்கே என்னைப் பிடிக்காதிருக்கையில்
யாருக்கு என்னைப் பிடித்துவிடப் போகிறதென
வினவுவதாகவுமில்லை.

தொலைபேசியில் வந்த செய்தியை
நெடுநேரமாய் உமிழ்ந்தவாறே.. 
அது மட்டும் உறுதி, 
பதில் அனுப்பப் போவதில்லை
இம்முறை என்னை நான்
தோற்றுவிடப் போகிறேன்.

இருப்பதைவிட
இல்லாது இருப்பது
என்னை மிகசௌகர்யமாக இருப்பதாக
உணரும் தருணம் இது.

இப்பொழுதெல்லாம்,
கண்கூசும் பகலில்
பத்துக்குப் பத்து அறையைவிட்டு
வெளியெங்கும் நான் நடமாடுவதில்லை..

இரவுமட்டுமே பிடித்துப் போய்விட்டதோ யென்னவோ,
நெடுநாட்களாய் வானம்
பசியூட்டியவாறே குழந்தையைத்
தொடர்கிறது.!

எனது தொலைபேசியில்
நான் வாசிக்காத செய்திகள்
குவிந்து கிடக்கிறது. 


நன்றி உயிரோசை..

11 comments:

வினோ said...

நல்ல இருக்குங்க ஆறுமுகம்...

hemikrish said...

அருமை ஆறுமுகம் (வழக்கம் போலவே)...."பதிவுலகம் நான்" என்னும் தலைப்பிற்கு உங்களை அழைத்திருக்கிறேன்...வாங்க...:-)

நேசமித்ரன் said...

வாழ்த்துகள்

VELU.G said...

அருமைங்க ஆறுமுகம்

க.பாலாசி said...

//இருப்பதைவிட
இல்லாது இருப்பது
என்னை மிகசௌகர்யமாக இருப்பதாக
உணரும் தருணம் இது.//

தலைப்பும் சரி உள்வைத்த வரிகளும் சரி... அசைத்துப்பார்க்கிறது.... நல்ல கவிதை...

rvelkannan said...

எனது தொலைபேசியில்
நான் வாசிக்காத செய்திகள்
குவிந்து கிடக்கிறது.//
that's excellent.
So...many meaning ...my friend

ஹேமா said...

ஏதாவது கவலையா இருக்கீங்களா.ரொம்ப நாளா என் பக்கமும் காண்ல.
காத்தாட வெளில வாங்க !

உயிரோடை said...

க‌விதை ந‌ல்லா இருக்கு

மதுரை சரவணன் said...

அருமை. வாழ்த்துக்கள்.

சிநேகிதன் அக்பர் said...

அருமை ஆறுமுகம்.

Geetha said...

கவிதையாய் நல்லாயிருக்கு.

கசடுகள் தள்ளிப் போகட்டும்.