சிற்சில ஞாபகங்கள்
என்றுமே அழியாதிருப்பின் அடையாளமாய்
பழையதை யொத்த கடிதங்கள்
இன்னும் சிற்சில..
இன்றும்..!
ஒரு மழைநாளில் தான்
உருகி வழிந்தது இரவு
நமக்கான மெழுகில்..!
அம்மெழுகின் கதகதப்பு,
என் வாழ்வின் கதவடைபட்ட பின்பும்..
தீராக் காற்றின்
எல்லாச் சுவர்களிலும்
மோதிக்கொண்டுதான் வாழ்கிறது..
ஒரு முடிந்த உரையாடலின்
எல்லாச் சொற்களிலும்
நீயே காதலி..
முடிவில்லா எழுத்துக்களின்
எல்லாக் கடிதங்களிலும்
நானே காதலன்..
மெழுகு உருகட்டும்..
இரவு நனையட்டும்..!
நன்றி உயிரோசை..
10 comments:
கவிதை நல்லாயிருக்கு ஆறுமுகம்.
ஏற்கனவே உருகிப்போய் இருந்தீங்க. ஊர்ல போய் உடம்பு தேறிடுச்சா? :)
விரைவில் அலை பேசுகிறேன்.
அருமை நண்ப
//ஒரு முடிந்த உரையாடலின்
எல்லாச் சொற்களிலும்
நீயே காதலி..//
சூப்பர் ....
//ஊர்ல போய் உடம்பு தேறிடுச்சா?//
என்னாச்சு நண்பா , இப்போது சரியாகிவிட்டதா...
அருமை அண்ணா,
உண்மையில் உருகி விட்டேன்
நல்லா இருக்கு ஆறு..
பழசும் படிச்சேன் ரொம்ப பிடிச்சிருக்கு...
நடக்கட்டும்.
நல்லாயிருக்கு ஆறுமுகம்.....
நல்லாருக்கு மாப்ள! தலைப்பு, பிரமாதம்!
//தீராக் காற்றின்
எல்லாச் சுவர்களிலும்
மோதிக்கொண்டுதான் வாழ்கிறது//
நல்லாயிருக்கு.
நினைவுகளை கொஞ்சம் பின்னோக்கி எடுத்துச் செல்கிறது கவிதை... அருமை நண்பா
சூப்பர். கவிதை ரொம்ப நல்லா இருக்கு
//உருகி வழிந்தது இரவு
நமக்கான மெழுகில்..!//
இந்த வரி ரொம்ப பிடிச்சது
Post a Comment