உனது வருகைக்குரிய
அன்பின் தடங்கள்..
ஒரு காத்திருப்பின்
பரிச்சயத்தை ஆயாசமாய்
அள்ளி முகர்கிறது,
ஒரு தாயின் மாரில்
குழந்தைகள் மருகுவதென .
ஒரு காத்திருப்புக்குப்
பின்னுள்ள மௌனங்களை
எப்படி மௌனமாக்குவதென்ற
கேவல்களில்தான்
அமிழ்ந்துவிடுகிறது
இன்னும் காதல்
காதலாகவே .
ஒரு காதல்கவிதை
எத்தனை எளிதோ
அத்தனை எளிதே அல்ல
ஒரு காதல் சொல்லப்படுவதென்பது .
அன்பின் தடங்கள்..
ஒரு காத்திருப்பின்
பரிச்சயத்தை ஆயாசமாய்
அள்ளி முகர்கிறது,
ஒரு தாயின் மாரில்
குழந்தைகள் மருகுவதென .
ஒரு காத்திருப்புக்குப்
பின்னுள்ள மௌனங்களை
எப்படி மௌனமாக்குவதென்ற
கேவல்களில்தான்
அமிழ்ந்துவிடுகிறது
இன்னும் காதல்
காதலாகவே .
ஒரு காதல்கவிதை
எத்தனை எளிதோ
அத்தனை எளிதே அல்ல
ஒரு காதல் சொல்லப்படுவதென்பது .
12 comments:
கடைசி பத்தி :)
கடைசியா முடித்த வரிகள் மிக அருமையாக இருக்கிறது நண்பரே...
//ஒரு காதல்கவிதை
எத்தனை எளிதோ
அத்தனை எளிதே அல்ல
ஒரு காதல் சொல்லப்படுவதென்பது .
//
அருமை நண்பரே
super ஆன முடிவு
//ஒரு காத்திருப்புக்குப்
பின்னுள்ள மௌனங்களை
எப்படி மௌனமாக்குவதென்ற
கேவல்களில்தான்
அமிழ்ந்துவிடுகிறது
இன்னும் காதல்
காதலாகவே .//
இது யோசிக்க வச்சுது சூப்பர்ப் பாஸ்...
நல்ல வரிகளில் உணர்ந்து ரசிக்கும்படியான ஒரு கவிதை.
மிகப் பிடித்திருக்கிறது ஆறுமுகம்.
பொதுவில் காதல் எளிதல்ல.
அதிலும் காத்திருப்பதும் நிராகரிக்கப்படுவதும் !
காத்திருத்தல் கொடும் தண்டனை. ம்ம் கடைசி பத்தி நச்ன்னு இருக்கு
நன்றி அசோக்.
நன்றி கமலேஷ்.
நன்றி வேலு.
நன்றி வசந்த்.
நன்றி சரவணக்குமார் அண்ணா.
நன்றி ஹேமா.
நன்றி உயிரோடை.
மௌனங்களை
எப்படி மௌனமாக்குவதென்ற
கேவல்களில்தான்
அமிழ்ந்துவிடுகிறது ///
மச்சான் துடிப்ப்புள்ள வரிகள் டா....... காத்திருத்தலின் மௌனம் பல சொற்களை / சொற்றொடர்களை பிணைந்து உருவாக்கப்பட்டது ..... நிறைய எழுது மாம்ஸ் ............
மிக அருமை நண்பா
அருமை நண்பரே
Post a Comment