கரும்பூச்சையின்
பச்சைக் கண்களிலிருந்து
தீட்டப்பட்டிருந்தது
ஒரு மரண வெம்மை..
இசைந்து கொடுக்க வல்லாது
மேஜையை
வெறித்த வண்ணம்
கரைந்தபடியாக இருந்தது
ஒரு தேநீரின் ஒப்புமை..
முன்னும் பின்னும்
அலைந்துக் கொண்டிருந்தவள்
தடக்கென எதையோ சொல்லியவாறே
நகர்ந்து விட்டிருந்தாள்..
நிலா விழு கடலென
பூப்பறிக்கத் துவங்கி
நெடுஞ்சாலை வண்ணத்துப் பூச்சிகளாய்
வர்ணம் ஒட்டிக்கொள்கிறதொரு மனசு !!
http://www.uyirmmai.com/Uyirosai/ContentDetails.aspx?cid=3043
நன்றி
உயிர்மை.
12 comments:
கரும்பூச்சையின் ?
தொடர்ந்து உயிரோசையில் உங்கள் கவிதைகள் வெளிவருவது மகிழ்ச்சியளிக்கிறது.
தொடருங்கள் நண்பரே.
குளிர்ச்சி தரும் பச்சையம் தருமா மரண வெம்மையை !பட்டாம்பூச்சியின் வண்ணப் பொடி மனதிலும் கவிதையிலும் !
கரும்பூச்சை = வண்ணாத்திப் பூச்சியா ?
கவிதை அருமை .
@ நேசமித்ரன்
ம், ஆமா நண்பா, ஹேமா சொன்ன மாதிரி தான்.
:)
நன்றி சரவணக்குமார் அண்ணா.
@ ஹேமா
ம்..அதே! உங்கள் புரிதல் ஈர்க்கிறது.. நன்றி.
கவிதை நல்லாயிருக்குங்க.
உயிரோசையில் படித்தேன் வாழ்த்துகள். சொல்லாடலின் பின்பு சொல் ஆழமும் இருக்கிறது
நல்லாயிருக்குங்க...
நன்றி பனித்துளி சங்கர்.
நன்றி சி.கருணாகரசு.
நன்றி வேல்கண்ணன்.
நன்றி அசோக்.
அருமையான கவி நடை மாம்ஸ் ...... இக்கவிதையின் தளம் / கரு இவற்றை அவதானிக்கும் பொது சிறகை விரிக்க தொடங்குகிறது கவிதை .... கரும் பூச்சை = கரும்பூனை ...
Post a Comment