தொடர்ந்த பத்தாவது வாரமாக எனது கவிதை உயிரோசை இணைய இதழில்..
ஊக்குவித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள்..
பாலைகளின் வர்ணமாய்
ரீங்கரிக்கும் ஒட்டகங்களில்
நிரம்பித் துள்ளும் தண்ணீராய்
மெல்ல மெல்ல
அண்ணாந்து கசிகின்றன
எழுத முயன்றதின் ரகசியம்.
என்னொரு சாமவனத்தில்
காட்டெருமையின் மூர்க்கத்தோடு
புணர்ந்தவர்களின் முகவரியைக்
கூச்சம்கடாசிக்
குறித்துக் கொள்ளுங்கள் நீங்கள்
எதற்கும் அவசியம் வரலாம்.
எனதிந்த விடியற்காலை வானில்
குழுமியிருந்த
சிறுவர்கள் என்னையும் சிறுவனாக்கிச்
செல்கிறார்கள் ,
ஆர்வமிருப்பின் நீங்கள்
ஒரு கவிதை புனையுங்கள்
எதற்கேனும் அவசியமாகலாம்.
நட்சத்திரங்கள்உதிர் கடலில்
நிலவைத்தூக்கி வரும் தனிமை
முகர்ந்து பருகுங்கள் நீங்கள்
இக்கணம் தொடர்ந்தே...
ஒட்டகங்களுக்கு விடுமுறை செய்தி
ஆனந்தக்கூத்து !
http://www.uyirmmai.com/Uyirosai/ContentDetails.aspx?cid=3005
நன்றி உயிர்மை.
15 comments:
உயிரோசையில் படித்தேன்.
நல்ல கவிதை.
தொடருங்கள்.
ம்ம் கலக்குங்க
உயிரோசைல வந்ததா ஆகா ! ம்ம் பெரிய ஆளாகிட்டு வரீங்க வாழ்த்துகள்
அசத்துகிறீர்கள் ஆறுமுகம்.
வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்.
வாழ்த்துகள்.அண்ணாந்து கசிகின்றன
எழுத முயன்றதின் ரகசியம் !
ம்,மகிழ்ச்சி.. நன்றி செல்வராஜ் ஜெகதீசன்.
அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல நேசமித்ரன்,
எல்லாம் உங்க ஆசிர்வாதம்தான் நண்பா.
நன்றி :-)
உங்கள் வருகைக்கு நன்றி சரவணக்குமார் அண்ணா.
வாழ்த்துகளுக்கு நன்றி சி.கருணாகரசு.
:-)
உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி ஹேமா.
நண்பரே ம்ம்...
ஒன்னும் பண்ணிக்க முடியாது போல..
பின்றீங்களே,,,வாழ்த்துக்கள் தொடருங்கள்...
விடுபட்டுப் போயிருந்த கவிதைகளையும் வாசிச்சேன் மாப்ள.
செம்ம பார்ம்ல இருக்கீங்க.
கொளுத்துங்க. வெளிச்சம் பரவட்டும். :-)
வாழ்த்துகள் மாப்ஸ்!
@ கமலேஷ்
நன்றிகள் நண்பரே.. :)
@ மாமா
உங்க வெளிச்சத்தில ஏதோ நாங்களும் கொஞ்சம் எரிஞ்சுட்டுப் போறோம்.. நன்றி.. :-)
அருமை நண்பரே
நன்றி வேலு.
அருமை நண்பரே வாழ்த்துக்கள்.
உங்கள் வருகைக்கும்,வாசிப்பிற்கும் நன்றி இளம் தூயவன்.
Post a Comment