Tuesday, June 1, 2010
மன்னிக்க!
கண்ணீர்த்துளிகளின் மிச்சத்தில்
எரிவது என்னவோ
ஒரு நட்பின் ஈரமும்
ஒரு காதலின் எச்சமும்..
காது கேட்பவர்களில்,
சில காதுகள்
துப்பும் எச்சிலும்
திமிரும் புன்னகையும்
அசாதரண ஆறுதலும்,
நொடியின் பின்நொடியிலும்...
இமைகள் ஊமைப் பொழுதென
உயிர் தேடித் திரிவதாய்
தொடர்ந்து விக்குகிறது
கையூண்டு இதயம்..!
கவிதை யெழுதுவது என்னவோ
சிலருக்கு மட்டுமே
வாய்த்து விடுகிறதெனினும்
தலைப்பில் சிரமமேதுமில்லை
நடைபயில்பவர்களுக்கு!
அவள் எப்பொழுதுமே அவள் ,
எனக்குப் பந்து விளையாடுதல் பிடிக்கும்
நிறைவு!
http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=2979
நன்றி உயிர்மை.
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
//
நாவைச் சுழற்றி
தன் ருசியை
பாதத்தில் நக்கிப் பார்க்கும்
பூனை
வலைக்குள்
காது விடைக்க
காத்திருக்கிறது
//
சூப்பர்ங்க.. கண்டினியூ பண்ணுங்க..
www.narumugai.com
நமக்கான ஓரிடம்
//கவிதை யெழுதுவது என்னவோ
சிலருக்கு மட்டுமே
வாய்த்து விடுகிறதெனினும்
//
நல்லா வாய்த்து இருக்கிறது தொடருங்கள்
வணக்கம்.இலையுதிர் காலத்திற்குள் உலவுகிறேன்.குளிர்ச்சியான கவிதைகள்.
நன்றி நறுமுகை ..
கீழ இருக்குற லிங்க் பாக்கலையா நண்பா ??
நன்றி வேலு.ஜி உங்கள் வாசிப்பிற்கும் பின்னூட்டத்திற்கும்..
உங்கள் அன்பிற்கு நன்றி நேசமித்திரன்..
:)
வணக்கம்.ம்,உங்கள் வருகையில் மகிழ்வு..
நன்றி ஹேமா..
அருமையான சொல்லாடல்களில்
அற்புதம் உங்களின் கவிதைகள்...
வழக்கம் போலவே இதுவும் அற்புதமான படைப்பு....
நன்றி ஜெயசீலன்..
//தலைப்பில் சிரமமேதுமில்லை
நடைபயில்பவர்களுக்கு!//
உண்மைதான்.
நன்று முருகேசன்.
உங்கள் வருகைக்கும்,வாசிப்பிற்கும் நன்றி அக்பர்..
Post a Comment