நிசப்தத்தின்
பெருவெளி யெங்கும் வெம்மை...
ஒரு மரணம் தான்
கவிதைக்குக் காரணியாகத்
திணிக்கப்படுகிறதென்றால்
காதலை வெறுக்கத் துணிவதென்பது
இயல்பு மீறலல்ல!
மாற்றம் வரம்பு மீறி
அடுத்து இன்னொரு
கவிதையில்
உன்னை மழையெனலாம்
மறக்காமல் பெய்துவிடு!
நேசிக்கும் பெண்ணை ஆகாயத்திலிருந்து தூவுதலென,
மறந்தும்
எங்கும் எழுதாது
காற்றில் மடித்து
காகிதத்தின் கதவைச்
சாத்திவிடப் போகிறேன்.
நாளை உன் மழலை
விளையாட.. கப்பல்
தேவைப்படும்.!
http://www.uyirmmai.com/Uyirosai/ContentDetails.aspx?cid=2933
நன்றி
உயிர்மை.
4 comments:
கவிதை மிகவும் அருமையாக இருக்கிறது நண்பரே...வாழ்த்துக்கள்..தொடருங்கள்...
ரொம்ப நல்லாருக்கு.
நன்றி கமலேஷ்..
நன்றி பா.ராஜாராம்..
Post a Comment