Saturday, March 6, 2010

காதலின் பெயர் பரிசீலனையில்..

பனியும் இலையும் பூத்திருந்த
அதிகாலையொன்றில் குழுமியது
நிரம்பி வழிந்த காதல்..

தொடர்ந்த நாழிகைகளில்
ஏதேதோ நிரம்பியும்
எதிர்வீட்டுக்குழந்தைகள்
மஞ்சள்டிரவுசர் அணிந்திருந்த
அப்பொம்மையை மீட்டியதும்
எழும்பிய அக்கீச்சொலியில்
முற்றமிட்டது மிதமிஞ்சிய காதல்..

இப்படியாக ..
விட்டுக்கொடுக்கப்பட்டிருந்த காதலில்
அதோ, தலைகாட்டாமல் சிரித்துச்செல்லும்
அப்பெண்ணும் மறைமுகப்படுகிறாள் !


http://www.thinnai.com/?module=displaystory&story_id=31003054&format=html



நன்றி திண்ணை..

2 comments:

Nafil said...

மஞ்சள் டிரவுசர் அணிந்த அந்த பொம்மை, ராமராஜன் பொம்மையா?

தலைக்காட்டாமல் தவிக்க வைக்கிறது இந்த கவிதை.

ஹ்ம்ம் தேவலை இருந்தாலும் நல்லா இருக்கு.

Unknown said...

ha..ha.. thanks nafil..