Sunday, February 28, 2010
துளி விஷத்திற்கான விலையொன்றும் அதிகமில்லை..
பூக்கள் கல்லறைகளுக்கெனவும்
பூத்துக்குலுங்குகின்றன
அஸ்தம வானங்களில்..
முன்னோக்கி உந்த
வாய்ப்பு மறுதலிக்கப்பட்ட வண்ணம்
சிவந்த ஒளிமுன்
சாலையில் துவங்கிய
அலுவலக காலை,
முன்னெப்பொழுதும் போலில்லாது
பேசி தீர்ப்பதற்கென
அவர்கள் பரிமாறிய சொற்வீசல்கள்
இன்னொரு அவர்களுக்கொன்றும்
புதியதாய் அமைந்துவிடுவதில்லை..
நேற்றைய ஷாலினியின் ரெட் டாப்சும்
இன்றைய கிஷோரின் புளூ ஜீன்ஸுக்குமாய்
வழக்கத்தை புறந்தள்ளி
சுவாரசியமாய் நகர்கிறது நண்பகல்..
பல பகல்கள்..
இன்னும் தெரிந்திருப்பதில்லை,
சிறுதுளி விஷமொன்றின் காத்திருப்பில்..
மறுதலிக்கப்பட்ட காதல்களும்,
அவைகளுக்குப்பின்னால்
கிஷோரும் ஷாலினியும் போல
பலபெயர்களும் கசிந்து கொண்டேயிருக்குமென!!
பூக்கள்..
கல்லறைகளுக்குமென,
மெல்ல நகர்கிறானொருவன்.
http://www.thinnai.com/?module=displaystory&story_id=31002273&format=html
நன்றி திண்ணை..
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
kallarai pookkalin vilai uyirooooooo........
hmmmmm nalla sindhanai.........
mmmm ........... உயிரை ஊடுருவி போகிறது நண்பா ,,, உன் கவிதை ...
நன்றி நபில்..
நன்றி முடிவிலி..
Post a Comment