Thursday, January 28, 2010

கலவியும் மழலைக்கான நாழிகையும்..!


கலவி முடித்து
திரும்பி புரளுகையில்
படுக்கை விரிப்பில்
ஆடவனும் பெண்டிரும்
சிந்தவிட்ட காதல்
மல்லாந்து கிடக்க
மலைத்தெழுகிறது இரவு..!

குஞ்சொன்று..
நடுவில் கொஞ்ச
கூர்தீட்டப்படும் நாட்கள்
ஒவ்வொன்றும் வெட்கத்தின்
விரல்கள் தாங்கி நகர..!

பின்னோக்கி நகர்ந்த
பிரசவஅறை
அவனின் அடிநாதத்தோடு
அவள் யோனியை பதம்பார்த்து
தொப்புள்கொடி தேடி
தீர்க்கிறது யதார்த்தத்தை..!

அப்பா உள்ளங்கையில்
பொத்தி வைத்திருந்த விழிகளை
அம்மா கன்னங்களில் கொட்ட
ஆழ்ந்த நித்திரை முறிபட்டு
யிர்பெறுகிறது தொட்டில்..!


http://keetru.com/index.php?option=com_content&view=article&id=2558:2010-01-28-04-56-38&catid=2:poems&Itemid=88

நன்றி கீற்று ..

2 comments:

நேசமித்ரன் said...

நாழிகையா?
நாளிகையா ?

கவிதை நல்லா இருக்குங்க

Unknown said...

தவறுக்கு மன்னிக்கவும்.. நாழிகைதான் சரி..

சுட்டிக்காட்டலுக்கும், வாழ்த்திற்கும் நன்றி நேசமித்ரன்..:)