Tuesday, December 15, 2009
பொய்யென பெய்யும் மழை..!
வார்த்தைகளுடைந்து
காட்சிகள் பெருத்து
காகிதகுடுவை தள்ள
குதிரை இலக்கின்றி ஆட ..
கோவண கிழவனின்
பெய்யாத மழைக்கென ,
மழலை சிறுமி..
உள்ளங்கை தாளம்..
முடிச்சியிட்டு முடியும்
மழை கவிதை
எங்கோ இப்பொழுதும் பெய்தோயலாம்..
வீங்கிய வானம்
தொங்கிய வயிறு
ஈசல் பிணங்கள்
அம்மணமாய் அங்கொழிந்துமிருக்கலாம்..
நமக்கென்ன..?
ஏனோ அச்செருகலில்
குடுவை .. குதிரை .. மனம்
முழுகவனமாய் ;
பின்..
பிழையின்றி ,
அந்திவானம் ..
மின்மினிபூச்சி ..
காமம் ..
இரவல் ..
தழுவல் .. நீள்கொடை விரிய...
கோவண கிழவனின்
பெய்யாத மழை
பெய்தே தீருவேனென
குதிரை - பேய்மழை பொய்ய,
அடைக்கப்படாத ஒற்றை ஜன்னல் மட்டும்
வாழ்வு ருசிப்பதாய்
தொலைந்திருந்தது
பூபோட்ட பாவாடை சிறுமியின்
மழை கனவு
என் இரவில்.
( இது உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பு
நடத்தும் கவிதை போட்டிக்காக எழுதியது. )
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
nalla irukku Aarumugam...
i wish u to get the success...
வாழ்த்துக்கள்
நன்றி பாலசந்தர்..
நன்றி தியாவின் பேனா..
நன்றி உழவன்..
அருமை .
வாழ்த்துக்கள்
நன்றி முகமூடியணிந்த பேனா..
" முகமூடியணிந்த பேனா " ...!! :-)
//அடைக்கப்படாத ஒற்றை ஜன்னல் மட்டும்
வாழ்வு ருசிப்பதாய்
தொலைந்திருந்தது//
அருமை ஆறுமுகம் முருகேசன்
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்
நன்றி thenammailakshmanan..
அருமையாக உள்ளது..வெற்றி பெற என் வாழ்த்துக்கள்
நன்றி hemikrish..
Post a Comment