Tuesday, September 1, 2009

அரேபிய ராசாக்கள் VI



இன்னும் மூன்று, நான்கு வருடங்கள்

கழித்து என் பெற்றோர்

விருப்பத்திற்கிணங்கியோ,

வாழ்கையை வாழ்க்கையாய் வாழ

கண்டிப்பாய் பெண்துணை

தேவையென்று நான் எண்ணினாலோ

உறுதியாக திருமண பந்தத்திற்கு

உட்படலாம்..

வரும் அந்த அப்பாவி பெண்

முதல்இரவிலோ,

இல்லை இரண்டாம்,மூன்றாம்

இரவுகளிலோ

என் மனசை தேடதுவங்குவாள்..

அந்நேரம் எப்பவோ என் மனசை

வளைகுடா நாடுகள் தின்று செரித்து

ஏப்பம் விட்டுவிட்டதென்பதை

கதையாகவோ, கவிதையாகவோ

சொல்ல துவங்குவேன்..

அதை கேட்டுவிட்டு

அவள் " ஓ ".. என்பாளோ,

" உச்ச் " கொட்டுவாளோ,

கண்ணீர்விடுவாளோ,

சரசரவெனமுத்தமழைபொழிவாளோ,

இல்லை இறுக்க கட்டிப்பிடித்து

அவள் மடியில்சாய்த்துகொள்வாளோ,

எப்படி எதிர்கொள்வாளோ ...............

சந்தேகங்களுடன் எனக்கும்,

என்னைபோலுள்ள

வளைகுடா நண்பர்களுக்குமாய்

கதை ஒன்றை எழுததொடங்குகிறேன்,

பின்பு ஏனோ மனமின்றி

நிறுத்தி விடுகிறேன்,

இன்னும் சில காலம் கழித்து மீண்டும்

எழுத தொடங்கலாமென.............

2 comments:

Nafil said...

உன்னை எனக்கு அறிமுகப் படுத்திய அற்புதம்னு சொல்லுவேன் இந்த கவிதையை.

யாரும் சொல்ல முன் வராத, சொல்ல தயங்கும், நினைவு

very very intresting..................

Unknown said...

thanks Nafil..