கனவுகள் தின்றதுபோக
எஞ்சிய மிச்சஉயிர்
காய்ந்து படிந்திருக்கும்
கவிதைகளில் ...
சாகுமுன் வாய்ப்பு கிடைத்தால்
என் இதயம் பிடுங்கி
காதல்பரிசு தருகிறேன் ...
எனை தின்ற கனவும்
கனவை தின்ற கவிதையும்
என்னையும்
என் காதலையும்
முழுமையாய் உன்னிடம் சரணடைக்கும் ...
அநேரம் நீ
மலைத்து பேந்த விழிக்காமல்
புன்னகை செய்
இறுக்க கட்டிபிடி
முத்தங்கள் விட்டுகோடு
மெதுவாய் தலைகோது
விரல்களில் சொடெக்கெடு
உயிரோசை கேள் ...
காதல் களைப்பில்
உன் மடிசாய்ந்து
கண்சொக்கும் நேரம்
காதோரம் செல்லகடி கடி ...
பின் இருவரும்
கைகோர்த்துகொண்டு
தொலைதூரம்
நடக்க துவங்கலாம் .................
3 comments:
காதலுக்காக உயிர் தரும் மன வலியையும் ..அதன் பின் வாழ்வின் மீதான ஆசையில் அதை உயிர்பிப்பதர்க்கான வழியை சொல்லிபோகிறது கவிதை ..அழகு .. வாழ்வது தானே காதல் இல்லையா ..?
ம்..ம்..வாழ்தல்தான் காதல்.. :)
நன்றி..
அநேரம் நீ
மலைத்து பேந்த விழிக்காமல்
புன்னகை செய்
இறுக்க கட்டிபிடி
முத்தங்கள் விட்டுகோடு
மெதுவாய் தலைகோது
விரல்களில் சொடெக்கெடு
உயிரோசை கேள் ...//
idhae padikkumbodhey ungal karpanai kaadhali en munneyum oramaai olindhu kolgiraal...
enakkum avalai kavidhai vadikka thonrugiradhu....
kaadhal kaadhal dhan! :)
Post a Comment